Sunday 29 March 2015

ஆறை நாடு


முன்னுரை:

                          ஆறை நாடு என்பது கொங்க தேசத்தின் 24 உட்கிடத்தை நாடுகளில் ஒரு நாடு ஆகும். இது காஞ்மாநதி என்று சங்க இலக்கியங்கள் போற்றும் நொய்யல் ஆற்றின் வடகரையில் அமைதிருக்கும் நாட்டு பிரிவு. இது தற்பொழுதைய கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களின் வடக்கு பகுதியில் அமைந்த நாடு ஆகும். இது கல்வெட்டுகளில் வடபரிசார நாடு என்று வழங்கப்படுகிறது. இந்த நாடு பற்றிய செய்திகளை காண்போம்.

சோழர்களின் வாழ்விடம் ஆறை :

                         சோழர்கள் தாங்கள் எங்கு சென்று வாழ்ந்தாலும் அவர்களும் அவர்களின் சுற்றாதாரும் வாழும் பகுதியை ஆறை என்றே பெயரிட்டு அழைப்பார்கள் இதனை சங்க காலம் தொட்டே காணலாம். இதனை நற்றினை பாடல் 265 யில் சென்னி அதாவது சோழன் ஆறை என்னும் பகுதியில் இருந்து ஆட்சி செய்வதாக கூறுகிறது.